கடந்த சில வாரங்களுக்கு முன், யாரும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், இவரை போல விஜய் டிவியின் பிரபலமான அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பார்கள். இப்படி இருக்க அவரும் தன்னை யாரும் இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.