உத்தரப் பிரதேசம்: லக்னோவில் மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் இருந்த சிறுமியை தூக்கி சென்ற மர்ம நபர் இந்த கொடூர செயலை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.