பள்ளிக்கல்வித்துறையின் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திறன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்த திறன் இயக்கம் (Targeted help for improving remediation & academic nurturing) 6 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டுள்ளது.