இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் படி நுகர்வோருக்கு 6 உரிமைகள் உள்ளன. பொருட்களை தேர்வு செய்யும் முறை, அபாயகரமான பொருட்களிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை, பொருட்களின் தரம் பற்றி அறியும் உரிமை, நுகர்வோர் நலன்கள் தொடர்பான அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை, நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அதற்கு தீர்வு பெறுவதற்கான உரிமை, நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை.