தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் படங்களை ஆகாஷ் தயாரிப்பதால் மூவருக்கும் பெரும் ரொக்கம் கைமாறியதற்கான ஆவணங்களை ED அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மூன்று பேரும் ED வளையத்தில் வரலாம் என கூறப்படுகிறது.