இளைஞர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே பலி

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் மணியரசன் மகன் மலையரசன் (வயது 29) சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் சிங்கம்புணரியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மலையரசன் விருந்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பி உள்ளார். அப்போது சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எஸ். வி. மங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே
திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி நோக்கி வந்த லாரி மீது வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே மலையரசன் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த எஸ். வி. மங்கலம் போலீசார் மலையரசன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மலையரசன் உடலை பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி