தமிழ்நாடு விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோபால் தலைமையில் சிவகங்கை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் தோழர் சுரேஷ் அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். மாவட்ட இணை செயலாளர் தோழர் ராஜேஷ் குமார் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் கண்ணதாசன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் இளையராஜா வரவு செலவு அறிக்கை முன்மொழிந்து பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராசு மற்றும் பூமிநாதன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.
சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் மிக நீண்ட காலமாக பணி புரியும் காப்பாளர்கள், சமையலர், காவலர் மற்றும் ஏவலர்கள் ஆகியோரை கலந்தாய்வு நடத்தி பணி மூப்பு அடிப்படையில் பணி மாறுதல் செய்ய வேண்டும் மேலும் கல்லூரி விடுதிகளில் சுழற்சி முறையில் சமையலர்களைப் பணியமர்த்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.