சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது கருங்குளம் கிராமம். அங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து காரைக்குடிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கருங்குளம் கிராமத்திலிருந்து 5 கி. மீ தொலைவில் உள்ள பட்டமங்கலம் சென்று அங்கிருந்து திருப்பத்தூர் சென்று, பேருந்து பிடித்து காரைக்குடிக்கு சென்று வந்தனர். இந்த ஊர் மக்கள், தங்களது கிராமத்திற்குப் பேருந்து வசதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மூலம் தமிழக அரசுக்கும் போக்குவரத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரிடம் கோரிக்கை விடுத்தனர் அதனடிப்படையில் இக்கிராமத்திற்கு வந்து செல்ல புதிய பேருந்து வழிதடத்தை ஏற்படுத்தி, 3 D என்ற புதிய பேருந்து இயக்கபட்டது. முதல்முறையாக தங்கள் கிராமத்துக்கு வந்த அரசு பேருந்தை சந்தனம், குங்குமம் தெளித்தும், மாலை அணிவித்து மலர்தூவியும் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் காரைக்குடி மண்டல மேலாளர் மற்றும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர் காட்சி FTP யில்