வைகாசி விசாகத் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சோமேஸ்வரர் - சவுந்தர நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 30. 05. 2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. விழா நாள்களில் தினமும் சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. இவ்விழாவின் ஒரு பகுதியாக, தினமும் இரவு சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பட்டனர். திருக்கல்யாணமும் விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிரியாவிடையுடன் சுவாமி பெரிய தேரில் மற்றும் அம்மன் சின்னத் தேரில் எழுந்தருளியுடன் ஆரம்பமாகியது. பின்னர், சுவாமி தேரை ஆண்கள் இழுத்து, அம்மன் தேரை பெண்கள் இழுத்து உலா செலுத்தினர். தேர், நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை பெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி