செல்வ முத்துமாரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி மேல தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் கோவில் வெளி பிரகாரத்தில் வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர் சுமார் 300-க்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர், கோவில் சார்பில் பூக்கள், எண்ணெய், மஞ்சள், வளையல், திரி, குங்குமம் பூஜை பொருள்கள் வழங்கப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் உலக நன்மை வேண்டியும் , விவசாயம் செழிக்க , அனைவரும் நல்ம் வேண்டும் பிரார்த்தனை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து 23 வார்டு அழகாபுரி தெற்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு மற்றும் பூச்சொரிதல் விழா முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கலந்து கொண்டு வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி