முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி வழிபாடு செய்தனர்.

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகப் பெருமான் திருக்கோவிலில் திருப்பரங்குன்றம் பாதயாத்திரை பக்தர்கள் முருக பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடத்தி வழிபாடு செய்தனர் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றி உள்ள பகுதியில் இருந்து ஒவ்வொரு குழுவாக ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு மாலை அணிந்து பாதயாத்திரை ஆக திருப்பரங்குன்றம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர் இதன் பாதயாத்திரை ஒரு குழு வழிபாடாக உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் விநாயகர் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 108 வெண் சங்குகள் மற்றும் கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகளை துவங்கினர் தொடர்ந்து பல்வேறு மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து கற்பூர ஆராதனை காண்பித்தனர் பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வளம் வந்து உற்சவர்கள் தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் ஸ்ரீநாதர் தவ முனிவர் சுவாமிக்கும் திருமஞ்சன பொடி மஞ்சள் பால் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல வகையான நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று 108 வெண் சங்குகள் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன நிறைவாக உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி