திருப்பத்தூரில் வீட்டின்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நாகராஜன் நகர் முதல் வீதியில் வசித்து வருபவர் அழகு குமார். இவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்சமயம் அழகு குமார் ஐயப்பன் கோவிலுக்கு யாத்திரை சென்ற நிலையில் அவரின் மனைவி டீக்கடையை பார்த்துக் கொள்வதற்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் மாடியில் கதவு திறக்கப்பட்டுள்ளதைக் கண்டு உடனடியாக வீட்டின் மேலே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோல் திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோலாக்கரில் பார்க்கும்போது தான் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது. உடனடியாக திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் கோவிலுக்கு சென்ற நிலையில் மதிய வேளையில் ஆள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியில் இது போன்ற திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் குடியிருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.