சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் காவல் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜானகி ராமன் இவர் வெள்ளஞ்சி விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வி. புதுக்குளத்தைச் சேர்ந்த கருப்பு மகன் வெற்றிச்செல்வத்தை விசாரணை செய்தபோது ஜானகிராமனை அவதூறாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கையில் வாள்வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றி செல்வத்தை கைது செய்ததோடு அவரிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்