தாரை தப்பட்டையுடன் விடிய விடிய நடந்த கரக எடுப்பு விழா

76பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ். புதூர் ஒன்றியம் கே. புதுப்பட்டியில் பெரியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு பின் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் ஒன்று கூடி கரக எடுப்பு விழா நடத்த முடிவு செய்தனர்.

தொடர்ந்து பெரியநாச்சி அம்மன் கோவிலில் கரகத்திற்கு கரகப் பூவால் ஜோடனை செய்து கரகம் சாமியாடி தலையில் வைக்கப்பட்டு சாமியாடிகள் அனைவரும் கே. புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்று நோய் நொடி நீங்கவும், விவசாயம் செழிக்கவும், குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு அருள் வாக்கு கூறியும் கிராம மக்களுக்கு நெற்றியில் திருநீறு பூசிவிட்டு மீண்டும் கோவில் வந்தடைந்தனர்.
கோவில் முன்பு உள்ள பொட்டலில் கரகாட்டம் நடைபெற்றது. இதில் கரகம் எடுத்து ஆடும் சாமியாடியுடன் சாமியாடிகள் கோவில் அரிவாள், சூளாயுதம், சாட்டையுடன் உறுமி மேளம் முழங்க தாரை தப்பட்டையுடன் கிராமத்து பெண்களின் குழவை சத்தம் ஒலிக்க விடிய விடிய ஆயிரக்கணக்கான கிராம மக்கள் முன்னிலையில் சாமியாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது நடைபெற்றது. 25 ஆண்டுகளுக்கு பின் கரகம் எடுப்பு விழா நடைபெற்றதால் பிறந்த வீடு, புகுந்த வீட்டு மக்களும், கிராம மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி