சிவகங்கை மாவட்டம் அரணையூர் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம். இக் கிராமத்தில் உள்ள அரணையூர் கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து நீர் வரத்து உள்ளது. கல்லூரணி, சித்தூரணி மற்றும் கொங்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த சிலர் இந்த வரத்துகால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பால் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டதில், ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாய்க்கு நீர் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இருப்பினும், இளையான்குடி வட்டாட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நீர் வரத்தை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.