கோடை விடுமுறை நிறைவடைந்த நிலையில் தமிழகத்தில், மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் இன்று (ஜூன் 2) திறக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து பள்ளிக்கு மாணவர்கள் வருவதால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர்கள் பல்வேறு வகையில் வரவேற்பு அளித்துள்ளனர். சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் மாணவிகளை பாரம்பரிய முறைப்படி சந்தன குங்குமம் வைத்து, இனிப்புகள் வழங்கி, ரோஜா பூ தூவி வரவேற்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. பள்ளி வளாகப் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன.
மேலும் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது.