சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து காரைக்குடி எண்ணும் எழுத்தும் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாக்கோட்டை வட்டாரத் தலைவர் காளியம்மாள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அன்பரசு பிரபாகரன் பேசினார். திருப்பத்தூரில்நடைபெற்ற ஆர்ப்பாடத்துக்கு வட்டாரத் தலைவர் சகாயராஜ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரங்க ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே சங்கம் சார்பில் இளையான்குடி, கல்லல் உள்ளிட்ட மற்ற மையங்களிலும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.