சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரங்களையே அடியுரமாக பயன்படுத்துகின்றனா். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் தெரிவிக்கையில், டிஏபி உரங்கள் தயாரிப்பவதற்கு தேவைப்படும் முக்கிய மூலப் பொருளான பாஸ்பாரிக் விலை அதிகரித்து வருவதால், டிஏபி உரங்கள் தற்போது உள்நாட்டில் அதிகமாக தயாா் செய்யப்படுவதில்லை. இதனால், டிஏபி உரங்களின் விற்பனை குறைவாக உள்ளது. இந்த நிலையில், டிஏபி உரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து சிவகங்கை மாவட்டவிவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் டிஏபி உரங்கள் சில நேரங்களில் துறைமுகங்களிலிருந்து. மாவட்டங்களுக்கு அனுப்புவதில் கால தாமதம் ஏற்படுகின்றது.
எனவே டிஏபி உரங்களுக்கு பதிலாக விவசாயிகள் என். பி. கே காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்.
மேலும் சூப்பா் பாஸ்பேட் உரம் உள் நாட்டிலேயே தயாா் செய்யப்படுவதால், அதன் விலையும் குறைவாக உள்ளது. எனவே, விவசாயிகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் டிஏபி உரங்களுக்கு பதிலாக சூப்பா் பாஸ்பேட் என். பி. கே காம்ப்ளக்ஸ் உரங்களை வாங்கி பயன்படுத்தலாம். மாவட்டத்தில்தற்போது யூரியா 4600 மெ. டன், டிஏபி 988 மெ. டன், பொட்டாஷ் 455 மெ. டன், காம்ப்ளக்ஸ் 2072 மெ. டன், சூப்பா் பாஸ்பேட் 360 மெ. டன் இருப்பு உள்ளது என்று கூறினார்.