திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பெரிய பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்பு அங்கிருந்து நடைபயணமாக அச்சுக்கட்டு ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சிவகங்கை மாவட்ட அரசு டவுன் ஹாஜி முகமது பாரூக் ஆலிம் தலைமையில் இந்த தொழுகை நடைபெற்றது. ஆண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி