சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியனுக்குட்பட்ட சிறியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்துள்ளதால் பேருந்து வசதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகவே சாலையை சீரமைத்து பேருந்து மீண்டும் இயக்க வேண்டுமென சிறியூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர்.