சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் கிராமத்தில் பல தலைமுறைகளாக பொதுமயானமாக பயன்பட்டு வரும் விகேஎன். சமத்துவ சுடுகாடு தற்போது தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிராமத்தின் வள்ளல் விகேஎன். அவர்கள், சமத்துவ சுடுகாட்டை மேம்படுத்த பல வசதிகளை – பாதை, எரியூட்டும் கூடம், இறுதி சடங்குகளுக்கான கட்டிடங்களை – தாராளமாக வழங்கியிருந்தார். இது ஊரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தும் பொதுமயானமாக இன்று வரை நிலைத்திருக்கிறது.
ஆனால் சமீபகாலமாக, தனி நபர்கள் இந்த சுடுகாட்டு பகுதிகளை தனிப்பட்ட முறையில் ஆக்கிரமித்து, முள்வேலி போட்டு அடைக்க முயற்சித்து வருகிறார்.
கிராமத்தின் பொதுச் சொத்துகளை அக்கிரமித்து வந்த இதே குழுவினர், தற்போது சுடுகாட்டிலும் கைவைக்க முயலுவதால், உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.
எனவே இந்த சுடுகாட்டிற்கு வழங்கப்பட்ட பட்டா எவ்வாறு பெறப்பட்டது என்பது விசாரிக்கப்பட்டு, முறைகேடானதாக இருப்பின் அதனை ரத்து செய்து, விகேஎன். சமத்துவ சுடுகாட்டை அரசு பாதுகாப்புடன் மீட்டெடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.