கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்த பொதுமக்கள்

74பார்த்தது
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி அருகே மருதிபட்டி கிராமத்தில் உள்ள மருது அய்யனார் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கோயில் காளை வளர்க்கப்பட்டு வந்தது அக்காளைக்கு கொம்பன் என பெயர் சூட்டப்பட்டு பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கி வெற்றி பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கோயில் காளை உயிரிழந்தது. இக்காளையை மருதிபட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வேஷ்டி, துண்டு மாலைகள் அணிவித்து , அஞ்சலி செலுத்தினர் , பின்னர் புரவி பொட்டலில் இருந்து வாகனத்தில் ஏற்றி பாரம்பரிய முறையில் மேல தாளத்துடன், வெடி வெடித்து, பெண்கள் குலவையிட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று மருதிபட்டி ஊரணி அருகே கோவில் காளை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோயில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவில் காளை உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி