சிவகங்கையை அடுத்துள்ள வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை இளையான்குடி சாலையில் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த அதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடம் வந்த 108 ஊழியர்கள் அவரை பரிசோதித்து அவர் இறந்ததாக கூறிய நிலையில் சிவகங்கை தாலுகா காவல்துறையினர் அவரின் சரளத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்விற்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மூன்று நாட்களில் தொடர்ச்சியாக மூன்று கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலைய
சிவகங்கை நகர் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.