குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

167பார்த்தது
குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை அருகே உள்ளது பையூர் குளத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் சிவகங்கையில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த கிராமம்சிவகங்கைக்கு மிக அருகாமையில் இருப்பதால் பெரும்பாலனோர் டூவீலர், சைக்கிள் மூலம் சிவகங்கை வருகின்றனர். தொண்டி ரோட்டில் இருந்து 2 கி. மீ. , தூரம் குளத்துப்பட்டிக்கு செல்லவேண்டும். இந்த ரோடானது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மழை காலத்தில் சேரும் சகதியுமாக இருக்கிறது. மாணவர்கள் பெரிதும் சிரமம் அடைகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி