பணத்தை வாங்க மறுத்து நீதி கேட்ட பெற்றோர்கள்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள ஜெஸ்ரில் பள்ளியில் வேங்கைபட்டியை சேர்ந்த பாலமுருகன் மகன் அஸ்விந்த் காரில் மர்மமான முறையில் உயிரிழந்தான்.

மகனை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆறுதல் கூற பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேங்கைபட்டி வருகை தந்தார். அங்கு மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி பாஜக கட்சி சார்பில் 5 லட்சம் வழங்கினார். ஆனால் மாணவனின் தந்தை எனக்கு நீதிதான் வேண்டும் பணம் வேண்டாம் என நயினார் நாகேந்திரன் காலில் விழுந்தார். பிறகு சமாதான படுத்தி பணத்தை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நீதி கிடைக்கவில்லை என்றால் மாணவனுக்கு நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணை கோருவோம் என கூறினார். முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. இது நாடு கண்டிருக்க கூடிய முழு நிதர்சனமான உண்மை. அஜீத்குமாராக சம்பவமாக இருக்கட்டும், அஸ்விந்தாக இருக்கட்டும் , போதை பொருள் பழக்க வழக்கமாக இருக்கட்டும் இதற்கு மக்கள்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி