வரும் 24ம் தேதி உயர்மட்ட குழு கூட்டம் சிராவயலில் பேட்டி.

579பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார். மேலும்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பது தவறு என்றும், எல்லா ஆட்சிகளிலும் சட்டம் ஒழுங்கில் சிறு, சிறு தவறுகள் நடப்பது சகஜம் என்றும் கூறினார்.
எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரத்தை ரத்து செய்துவிட்டு
வாக்குச்சீட்டு முறை கொண்டு வந்தால் நல்லது தான் அப்பொழுதுதான் நாம் ஓட்டளிப்பது நமக்கு தெரியும் என்றசரத்குமார், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்லும் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை பிணைய கைதிகளாக வைக்காமல் உடனே விடுவித்தால் இரண்டு நாட்டு உறவுகளும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி