சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் தாலுகா நாச்சியார்புரம் அருகேவுள்ளது வலையபட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வெள்ளைக்கண்ணு, நாச்சம்மை தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரே ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் மூன்றாவது பிள்ளையான பாலசுப்ரமணியன் மட்டும் வேலை நிமித்தமாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிங்கப்பூர் நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். பாலசுப்ரமணியனை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி, சிவகங்கை ஆட்சியரிடம் மனுஅளித்தனர் மீண்டும் அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து நாச்சம்மை பேசினர் அப்பொழுது இந்த மனுவை பெற்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சிதம்பரநாதன், சிங்கப்பூரில் உள்ள தனது நண்பர் வசந்த் மூலம் 30 நிமிடத்தில் பாலசுப்ரமணியனை கண்டுபிடித்தார்.
பாலசுப்ரமணியன் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டதால், பெற்றோரிடம் தெரிவிக்க பயந்து தொடர்பை துண்டித்துக்கொண்டதாக தெரிவித்தார்.
மகன் உயிருடன் இருப்பதை அறிந்த தாய் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
செய்தியாளரின் இச்செயலைஇன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றன