முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா

60பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ். புதூர் ஒன்றியம் புழுதிபட்டி முத்து மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா லெக்கம்மா காட்டில் பச்சை குடில் அமைத்து வைக்கோல் பிரியில் வேப்பிலை சொருகி காப்பு கட்டி விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து அரிய நாச்சி அம்மன் கோவில் வளாகம் அம்பலக்கல் முன் சாமி ஆட்டம் ஆடி ஆண்கள் பெண்கள் இருவரும் கும்மி அடித்து பாரம்பரிய மகுடு தப்பு அடித்து இங்கிருந்து ஊர்வலமாக சென்று லெக்கமா காட்டில் கிராம மக்கள் ஒன்று கூடி கும்மியடித்து இன்று இரவு சுமார் 8 மணியளவில்வழிபாடு செய்தனர்.

பங்குனி பொங்கல் திருவிழா துவங்கிய நாள் முதல் தினசரி இரவு லெக்கமாக காட்டில் ஆண்கள் பெண்கள் இருவரும் கும்மியாட்டம் நடைபெறும். பத்தாம் நாள் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் கொழுக்கட்டை சூறையிடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆண்கள் வைந்தானை அடித்து குச்சிகளை சூறையிடுவர் அதனைத் தொடர்ந்து காப்பு அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி