சிவகங்கை அரண்மனை அருகே மன்னர் காலத்தில் செம்பூரான் கற்களை கொண்டு 5 ஏக்கரில் பிரம்மாண்டமான தெப்பகுளம் கட்டினர். இந்த தெப்பக்குளத்தை பராமரிக்காமலும், பாதுகாக்காமலும் விட்டு விட்டனர். இதனால் தெப்பக்குளத்திற்கு செட்டியூரணியில் இருந்து வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. அக்கால்வாயில் மழைநீர் செல்லாமல் வீடுகள், ஓட்டல், வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவு நீரை விட்டனர்.
அக்கழிவு நீர் தெப்பக்குளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும்
பிளாஸ்டிக், குப்பைகளால் மிதக்கின்றன,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெப்பக்குளத்தில் உள்ள நீராதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், தனி கவனம் செலுத்தி தெப்பக்குள தடுப்பு சுவர்களை கட்டி, கழிவு நீரில் கலக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொது மக்களிடமிருந்துகோரிக்கை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து
தற்போது சிவகங்கை நகராட்சி ஆணையர், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த தலைமையில் காலையில் நகராட்சி பணியாளர்கள் பிளாஸ்டிக் போட் மூலம் 2 டன் அளவில் குப்பைகள் அகற்றி முதல் கட்டமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.