சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், பூவந்தி, திருமாஞ்சோலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. சாலை அகலப்படுத்தபட்டுள்ள நிலையில் திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான சரக்கு வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்ததொடங்கியுள்ளன. தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வளர்ந்துள்ள கருவேல மரங்கள் சாலையையும் ஆக்கிரமித்து வளர்ந்து வருகின்றன. இரவில் வாகன ஓட்டிகள் கருவேல மரம் ரோட்டை ஆக்கிரமித்திருப்பது தெரியாமல் அதில் விழுந்து காயமடைகின்றனர். சில நாட்களுக்கு முன் திருப்புவனத்தில் இருந்து பூவந்தி சென்ற வியாபாரி இரவில் கருவேல மரத்தினுள் சிக்கி கண்களில் காயமடைந்தார். மடப்புரம் கண்மாயை ஒட்டி அமைக்கப்பட்ட சிமென்ட் தடுப்புச்சுவரும் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர் .