யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தவர் கைது

67பார்த்தது
சிவகங்கை அருகே கீழக்குளம் பகுதியில் ரோந்து சென்ற சிவகங்கை தாலுகா எஸ். ஐ. பிரேம்குமார், ஓட்டக்குளம் கண்மாய்க்கரை பகுதியில் முட்புதரில் பதுங்கி இருந்த மகேஸ்வரன் (19) என்ற இளைஞரை பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் மகேஸ்வரன் கீழக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரை சோதனையிட்ட பொழுது அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் ஒரு நீளமான வாள் பறிமுதல் செய்யப்பட்டன. மகேஸ்வரனும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ்குமார் (26), ரமேஷ்குமார் (24), சூர்யா (27) ஆகியோரும் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி