முத்தூர் கிராமத்தில் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்

82பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே முத்தூர் கிராமத்தில் மிகவும் பழமை பெற்ற முன்னின்ற விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று மாலையில் முதல் கால யாக பூஜையுடன் தொடங்கப்பட்டு இன்று காலையில் இரண்டாம் கால யாக பூஜைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது அதைத்தொடர்ந்து பூஜை செய்த புனித கலசங்களை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து எடுத்து வந்து கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் செய்தனர் பின்னர் மூலவர் விநாயகருக்கு மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் கிராமத்தார்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர் அனைவருக்கும் அன்னதானம் இன்று மதியம் சுமார் 1 மணி வரை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி