கருக்குமடை அய்யனார் கோவில் வைகாசி திருவிழா

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சத்துரு சம்ஹாரக்கோட்டை என்று அழைக்கப்படும் எஸ் எஸ் கோட்டையில் உள்ள படைத்தலைவி அம்மன்மற்றும் கருக்குமடை அய்யனார் கோவில் வைகாசி திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமி ஆட்டத்துடன் விழா நடைபெற்றது. எட்டாம் நாள் விழாவாக இன்று காலை பால்குடம் எடுத்து வரும் விழா நடைபெற்றது. எஸ் எஸ் கோட்டை சீனி விநாயகர் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் என எஸ் எஸ் கோட்டை கிராமத்தார்கள் பக்தர்கள் பால்குடம் சுமந்து கொண்டு கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சியாமுத்துபட்டியில் உள்ள படைத்தலைவி அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை கட்டப்பட்டது. தொடர்ந்து சியாமுத்துப்பட்டி வேளார் வம்சாவளிகோவில் வீட்டில் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை தயாராக இருந்த நிலையில் சியாமுத்துப்பட்டி வேளார் வம்சாவளி கோவில் வீட்டிலிருந்து இருந்து கிராமத்தார்கள் ஒன்றிணைந்து அம்மன் சிலையை சிலையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு படைத்தலைவி அம்மன் கோவிலில் சேர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி