கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி

64பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறாதது குறித்து அதிமுக ஆட்சியை குற்றம்சாட்டினார். "போலியான உறுப்பினர்கள் நீக்கப்பட்டு, உண்மையான உறுப்பினர்கள் சேர்க்கும் பணி முடிந்தவுடன் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும்" என்று தெரிவித்தார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்ட ஊதியம் கூட நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும், தமிழர்களின் வரிப்பணத்தில் மற்ற மாநிலங்கள் பயனடைவதையும் விமர்சித்தார். அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து பேசும் போது, "தமிழகத்தில் யார் பிரதான எதிர்க்கட்சி என்பதை EPS, OPS, செங்கோட்டையனிடம் கேளுங்கள்" என அதிமுக தலைவர்களை விமர்சித்தார். "2026 தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை நிரூபிக்கும்" என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்து, "எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்பது எந்த விதத்திலும் நியாயமில்லை, இது ஒரு தவறு" எனக் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி