விவசாயிகளுக்கான இடைமுக பணிமனை நிகழ்ச்சி

72பார்த்தது
சிவகங்கை வியான்னி அருட்பணி மையத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம் நிலை–IV-கீழ், விவசாயிகளுக்கான இடைமுக பணிமனை நிகழ்ச்சியினை, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மதுரை தொண்டி சாலையில் வியான்னி அருட்பணி மையத்தில்தொடங்கி வைத்து, தெரிவிக்கையில்:
, சிவகங்கை மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை- IV –ன் கீழ், கீழ் வைகை உபவடிநிலப் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் விவசாயிகள் பங்கேற்கும் 2 நாட்கள் இடைமுக பணிமனை நிகழ்ச்சி இன்றையதினம், சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் வேளாண் பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்வது மட்டுமன்றி, எளியமுறையில் அதனை விற்பனை செய்வதற்கு பயனுள்ள வகையில், வர்த்தகம் செய்வது தொடர்பாக இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. வேளாண் பெருங்குடி மக்களை குழுவாக ஒருங்கிணைத்து, உழவர் உற்பத்தி குழுக்களை ஏற்படுத்தி, அதன் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது. அதனடிப்படையில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் சிவகங்கை மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. என தெரிவித்தார்

டேக்ஸ் :