சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பெரிச்சிகோயிலில் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா தனியார் திருமண மாகாலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைரமணி முன்னிலையில், தொழிலதிபர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள், புத்தகம், பேக் போன்ற பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகள் விடுகதை, ரைம்ஸ், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம்தங்களது திறமையை காட்டி பார்வையாளர்களின் கரவொளியைப் பெற்றனர். நிகழ்ச்சியில் பேசிய காவல்துணை கண்காணிப்பாளர் செல்வகுமார், தான் அரசு துவக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் மொழியில்பயின்றதாகவும், அரசு பள்ளி மாணவர்கள் சிறுவயதிலிருந்தே கவனத்துடன் படித்தால் உயர்ந்த பதவியை அடையலாம் என்பதற்கு தானே உதாரணம் எனவும், எனவே பெற்றோர்கள் சிறுவயதில் முதலே தங்களது குழந்தைகளை கவனத்துடன் படிக்க வைக்க வேண்டும். சாதனை புரிய மொழி ஒரு தடையல்ல என்றவர், கலை நிகழ்ச்சிகள் மாணவ மாணவிகள் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கண்டுகளித்தனர்.