சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் 192 வது குருபூஜை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு. ஆடி மாதம் நடைபெறும் குருபூஜை விழா இன்று சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பால் சந்தனம் மஞ்சள் போன்ற 36 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று. மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் முன்பு உள்ள அன்னதான மண்டபத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள அன்னத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து , தீபாராதனை காண்பிக்கப்பட்டு 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.