ஆண்கள் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள கோரிக்கை

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 35 வது உலக மக்கள் தொகை தினம் இன்றுகடைபிடிக்கப்பட்டது. உலக மக்கள்தொகைதினம்1989ம் ஆண்டு ஜூலை 11 ல் துவங்கப்பட்டுஅன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும்ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகைதினம் கடைபிடிக்கப்பட்டு உலகம்முழுவதும்சிறப்பிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவ அலுவலா் (பொறுப்பு)ஆமினாபாதம் தலைமையில், மருத்துவர்கள்பாக்கியலட்சுமி, வினோதினி பிரிட்டோ ஆகியோர் முன்னிலையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், வெளி நோயாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் வினோதினி பிரிட்டோ குழந்தைகளுக்கு பிரச்சினை உள்ளது, அம்மாக்களுக்கு ரத்த கொதிப்பு உள்ளது போன்ற பல்வேறு பிரச்சினைகளை காரணம் காட்டி குடும்ப கட்டுப்பாடு செய்வதை தவிர்த்து வருகிறீர்கள், அது தவறு என்றார் மேற்பார்வையாளர் சுந்தரி பேசுகையில், மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர குடும்ப கட்டுப்பாடு அவசியம் என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் உணர வேண்டும், சமூகத்தில் குடும்பக்கட்டுப்பாடு என்றால் அது பெண்ணுக்கான பொறுப்பு என்று ஆண்கள் ஒதுங்கி விடுகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டு செய்து கொள்ளஆண்கள் முன்வரவேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி