சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம், என 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிறைவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் கிராமங்களில் நகரங்களுக்கு இணையாக உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சிறப்பான அரசாக இந்த அரசு திகழ்கிறது. தொடர்ந்து பேசுகையில் ஏதோ ஓட்டு போட்டார்கள் வந்தோம் இருந்தோம் போனோம் என்ன போய்விடாமல் இங்குள்ள ஊராட்சி மன்ற தலைவர் நம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி உடையவர்களாகவும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க இத்தகைய காரியங்களை அவர் செய்து இருக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இவரைப் போலத்தான் நானும் என கூறி "உனக்கு இப்பதானே முதல் தடவை எனக்கு இது நாலாவது தடவை" எனவே நானும் அவர்கள் மத்தியில் நன்றி உடையவனாக இருக்கிறேன் என்று கலகலப்பாக பேசினார்.