சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ரூ 3. 58 கோடி நிதியில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது, இதை காலையில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார், இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மாலையில் வருகை தந்து குத்து விளக்கு ஏற்றினார். இதனையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர் சந்தித்த போது, கூட்டுறவு வங்கிகளில் மூலமாக மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படும், ஒன்றிய அரசு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவது நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஆதலால் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ 1 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆதலால் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை கல்வி கடன் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.