சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

81பார்த்தது
சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் பகுதிக்குட்பட்ட தனியார் மஹாலில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொத்தம் 120 ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டார். 

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, உதவி இயக்குநர்கள் கேசவதாசன் (ஊராட்சிகள்), இரவி (தனிக்கை), செயற்பொறியாளர் அனுராதா, மாவட்ட ஊராட்சி செயலர் சதாசிவம், உதவி செயற்பொறியாளர் சித்திரைவேல் மற்றும் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி