பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வண்ணம், ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள், சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக வருகின்ற 04.01.2025 (சனிக்கிழமை) அன்று காலை 7.00 மணியளவில் அரண்மனை வாசல் பகுதியிலிருந்து தொடங்கி நடைபெறவுள்ளது.
மேலும், போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவிகள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து (Bonafide Certificate) வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும். சொந்த மிதிவண்டி (சைக்கிள்) கொண்டு வர வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவில் தயாரான சாதாரண மிதிவண்டிகள் மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும். இப்போட்டியில் Gear cycle and race cycle பயன்படுத்த அனுமதி இல்லை.
போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையினை, காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமோ மட்டுமே வழங்கப்படும் என்பதால், போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ/மாணவியர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தக நகலினையும், ஆதார் நகலினையும் கொண்டு வர வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களை 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.