43 மழைமானி நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக ஆட்சியர் தகவல்

84பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவினை துல்லியமாக கண்காணிக்கும் பொருட்டு 1400 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 9 வட்டங்களில் 43 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 2 தானியங்கி வானிலை நிலையம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வட்டவாரியாக பணிகள் தற்போது நடைபெற உள்ளன.
மேற்படி தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று புதன்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி