இந்திய வளா்ச்சி இயக்கம் 'யுரேகா எய்டு இந்தியா' என்ற அமைப்பின் மூலம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை, கோபாலபச்சேரி, காளாப்பூா், மு. கோவில்பட்டி, மதுராபுரி ஆகிய கிராமங்களில் காலை, மாலை வேளைகளில் செயல்பட்டு வருகிறது.
இங்கு மாணவிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி, அறிவியல், கணித விளையாட்டின் மூலம் ஆக்கப்பூா்வமான பயிற்சியளித்தலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு நேற்று மிதிவண்டிகள், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு எய்டு இந்தியா திட்ட இயக்குநா் சுமதி தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ராஜபாண்டியன், முன்னாள் தலைமை ஆசிரியா்கள் செல்வசுந்தரி, ஈஸ்வரி, இரா. கௌசல்யா, முனைவா் எஸ். எஸ். மணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிங்கம்புணரி ஒன்றியக் குழு உறுப்பினா் உமாசோணையன் மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக எய்டு இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை, சிங்கம்புணரி போ. சோபனா, இ. சோபனா, கற்பகம், யுரேகா ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.