உயிரிழந்த மாணவனின் குடும்பத்தை சந்தித்த பாஜக மாநில தலைவர்

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள ஜெஸ்ரில் பள்ளியில் பயின்று வந்த வேங்கைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகன் அஸ்விந்த், காரில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மகனின் மரணத்தில் வாடும் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வேங்கைபட்டிக்கு வருகை தந்தார். அப்போது, மாணவனின் பெற்றோர்களிடம் ஆறுதல் கூறி, பாஜக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நேரம், மாணவனின் தந்தை "எனக்கு பணம் வேண்டாம், எனக்கு நீதிதான் வேண்டும்" எனக் கூறி, நயினார் நாகேந்திரன் காலில் விழுந்தார். இதனை அன்புடன் சமாதானப்படுத்திய நயினார் நாகேந்திரன், நீதிக்காக தங்களால் இயன்ற அனைத்தும் செய்யப்படும் என்று உறுதி அளித்ததுடன், நிதியுதவியையும் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி