கலைப்போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு

71பார்த்தது
கலைப்போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு
மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ், காசோலை பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களை கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற ஊக்குவிக்கும் விதமாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட, மாநிலஅளவிலான கலைப் போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம். கிராமிய நடனம், கருவியிசை, மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் நடத்த அரசு உத்தரவிட்டது.
மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 6, 000 இரண்டாம் பரிசாக ரூ. 4, 500, மூன்றாம் பரிசாக ரூ. 3, 500 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கடந்த 7. 1. 2024 அன்று 5 பிரிவுகளில் மாவட்ட கலைப்போட்டிகள் நடைபெற்றது. அதில், குரலிசை, பரதம், கருவியிசை, ஓவியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகளில் முதல் 3 இடங்களை வென்ற மாணவ, மாணவிகளுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியர் ஆஷாஅஜித் சான்றிதழ் மற்றும் காசோலைகளை வழங்கி வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி