தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய ஆண்டாள் பெருமாள்

51பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் 95வது தலமான அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் ஆடிப்பூர பெருவிழாவை முன்னிட்டு மூன்றாம் திருநாளில் ஆண்டாள் பெருமாள் சிறிய திருவடியான தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் இவ்விழா கடந்த 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் மூன்றாம் திருநாளில் உற்சவர் சௌமிய நாராயண பெருமாள் கோதை நாச்சியாருடன் சர்வ அலங்காரத்தில் தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பல்வேறு சேவைகளும் துளசியால் அர்ச்சனைகளும் நடைபெற்றன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் வானவெடிகளுடன் மின்னொழியில் பவனி வந்த பெருமாள் ஆண்டாள் தாயாருக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி