சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ள நிலையில்,
இதுகுறித்து அதிமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு நகர் மன்ற தலைவர் முத்து துரை முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி இல்லை என்று கூறும் நகர் மன்ற தலைவர், தனக்கு
சாதகமான பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கி கொள்வதாக குற்றம் சாட்டி அதிமுக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்து நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன
கோஷமிட்டனர்.