சிவகங்கை: கல்குவாரி விபத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை

52பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை பகுதியில் செயல்பட்ட தனியார் மெகா ப்ளூ மெட்டல் கல்குவாரியில், கடந்த மே 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை சுமார் 400 அடி ஆழ பள்ளத்தில், விதிமீறலாக பாறைகள் வெடிக்க தயாராக துளையிடும் பணியின் போது, பாறைகள் சரிந்து விழுந்ததால் 6 தொழிலாளர்கள், உட்பட புலம்பெயர் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, உரிமையாளர் மேகவர்ணனின் தம்பி கமல்நாதன், குவாரி பொறுப்பாளர் கலையரசன் மற்றும் மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் மட்டும் எஸ். எஸ். கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். உரிமையாளர் மேகவர்ணனை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து தொடர்பான விசாரணையில், உரிமம் முடிந்த பின்பும் கடந்த 8 மாதங்களாக இந்த கல்குவாரி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மேகவர்ணன் பெற்ற உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளார். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதபடியால் ஏற்பட்ட இந்த விபத்துக்குப் பொறுப்பாளர்களாக கருதப்பட்ட கனிமவளத்துறை RI வினோத்குமார் மற்றும் மல்லாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் ஆகியோர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிங்கம்புணரி வட்டாட்சியர் பரிமளா பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் அதிரடியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி