திருப்பத்தூர்: கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டவர்

63பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் பத்தாம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, இத்தாலி, ஐரோப்பா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டினர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாணவ மாணவிகள் தாரை தப்பட்டை பரைமுழங்க கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட இயற்கை குடிலில் பொங்கல் வைத்து வழிபட்டு "பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்" என்று கூறி மகிழ்ந்தனர். 

தொடர்ந்து சிலம்பாட்டம், கருப்பசாமி ஆட்டம் மற்றும் மாணவ மாணவிகளின் பல்வேறு ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சமூக வலைதள நடிப்பு அரங்கன் என்று பேசப்படும் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமக்கே உரிய நடிப்பு பாணியில் நடித்து அசத்தினார். தமிழர்களின் பண்டைய கால பாரம்பரியம் மாறாமல் நடத்தப்பட்ட இந்த சிறப்பு பொங்கல் விழாவில் மாணவ மாணவிகளின் குதூகலம் பொங்க ஆடிப்பாடி மகிழ்ந்தது அக்காலத்திற்கே செல்லும் அளவிற்கு காண்போரை ரசிக்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி